×

44.61 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக தற்காலிக பஸ் நிலையம் அமையும் இடங்கள் ஆய்வு

வேலூர், டிச.13: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 44.61 கோடியில் கடப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றாக தற்காலிக பஸ் நிலையத்திற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டுவதற்கு 44.61 கோடியில் 9.25 ஏக்கரில் ஓரடுக்கு கொண்ட பஸ் நிலையம் அமைய உள்ளது. இதற்கிடையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டுவது தொடர்பான அனைத்துக்கட்சியினர், வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றாக தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆறுமுகம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகர், கருணாநிதி ஆகியோர் வேலூர் பழைய பஸ் நிலையத்தை தற்காலிக பஸ் நிலையமாக மாற்றுவது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அப்ேபாது, வேலூரில் திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், சென்னை, திருவண்ணாமலை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்றும், ஒரே இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் உள்ளதா? அல்லது 4 இடங்களில் இருந்து பிரித்து அனுப்பலாமா? என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Tags : Inspection ,bus stand ,bus station ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை