வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர், டிச.13: வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். வேலூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் தாயம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில மார்ச் 2020ம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2, பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2, பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

பார்வையற்றோர், வாய்பேசாத மற்றும் காதுகேளாதோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் வரும் 20ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: