×

தூத்துக்குடியில் மினிலாரி மோதி ரயில்வே கேட் பழுது

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடியில் மினிலாரி மோதியதில் 1ம் எண் ரயில்வே கேட் பழுதானது. இதையடுத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் அருகே 1ம் எண் ரயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் ரயில் வருகைக்காக இந்த கேட் மூடப்பட்டது. அப்போது அங்கு வேகமாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கேட்டில் மோதியது. இதில் கேட்டின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. இதையடுத்து கேட்டை சரி செய்யும் பணி துவங்கியது. இதனால் அந்த கேட்டிற்கு முன்பாக இரும்பு சங்கிலியால் தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் கேட் பழுதை நீக்கி மீண்டும் நிறுவும் பணியில் பணியில் ஈடுபட்டனர். இப்பணி நேற்று இரவு வரை நீடித்தது. அப்பகுதி வழியாக செல்லவேண்டிய வாகனங்கள் 2ம் எண் ரயில்வே கேட் வழியாகவும், வடக்கு பீச் ரோடு வழியாகவுமே செல்ல வேண்டியிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு பணிகளுக்குச் செல்வோர், பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் அவதிக்கு உள்ளாகினர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...