×

ஜன.8ல் அகில இந்திய வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடியில் ஆலோசனை

ஸ்பிக்நகர், டிச. 13: ஜனவரி 8ல் மேற்கொள்ளப்படும் அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி ஐஎன்டியுசி அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில் ஏஐடியுசி மாநில செயலாளர் மணி, துணைத்தலைவர் பாலசிங்கம், சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் ரசல், சந்திரசேகர், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், போக்குவரத்து சங்க நிர்வாகி கருப்பசாமி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சிவராமன், மாவட்டத் தலைவர் சகாயம், ஹெச்எம்எஸ் சார்பில் துறைமுகம் சத்யா, ஆசான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றுப் பேசினர்.

இதில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள்விரோத கொள்கைகளைக் கண்டித்து மத்திய தொழற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8ல் மேற்கொள்ளப்படும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வது. வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்படடுள்ள 12 அம்ச கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியமாக ரு.21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரு.6 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்துவதை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிச்சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடைவணிக நிறுவனங்கள்ஜனவரி 8 அன்று கடையடைப்பு நடத்தி ஆதரவு தர வேண்டும். இதே போல் போக்குவரத்து நிறுவனங்கள், லாரி, வாகன உரிமையாளர்களும்  வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : All India Strike ,Thoothukudi ,trade unions ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...