இளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடக்கம்

வானூர், டிச. 13: வானூர் தாலுகா டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வசந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெகஷீஜா வரவேற்றார். புதுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இளங்கோவன் மன்றத்தின் நோக்கங்கள் குறித்தும் மாணவர்கள் இணைந்து செயலாற்றுவது குறித்தும் பேசினார். ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு குழந்தைகள் உரிமை தொடர்பான வழிகாட்டு புத்தகங்கள், நமது பாதுகாப்பு நம் உரிமை, தனிமனித உரிமை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: