திருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம்

திருவெண்ணெய்நல்லூர், டிச. 13: திருவெண்ணெய்நல்லூரில் தற்காலிக தாலுகா அலுவலகம் துவங்கியது. கூடுதல் ஆட்சியர் துவக்கி வைத்தார். திருவெண்ணெய்நல்லூர் பகுதியை தலையிடமாக கொண்ட தனி தாலுகா கடந்த சிலநாட்களுக்கு முன்பு  அறிவிக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக தற்காலிக அலுவலகம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழைய கல்லூரி கட்டிடம், பேரூராட்சி சமூதாய கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கல்லூரி கட்டிடம் இரண்டும்  தாலுகா அலுவலகம்செயல்பட ஏற்றதாக இல்லாததால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சமூதாய கூடத்தைதேர்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தாலுகா அலுவலகம் செயல்படதுவங்கியது.

இதன் பணியை  விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திருவெண்ணெய்நல்லூர்வட்டாட்சியர் வேல்முருகன், சமூக நல பாதுகாப்பு தனி கோவர்த்தனன், தலைமையிடத்துதுணை வட்டாட்சியர் ரகுராம், மண்டல துணை வட்டாட்சியர் மகாதேவன், வருவாய்ஆய்வாளர்கள் பாரதிராஜா, பரணி, தேவிகலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Commencement ,Taluk Office ,Thiruvennayinallur ,
× RELATED பேச்சுவார்த்தையில் உடன்பாடு...