×

காந்தலவாடி கிராமமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

விழுப்புரம்,  டிச. 13: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தலவாடி  கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிடுவதற்காக சென்றனர். தகவலறிந்த டிஎஸ்பி சங்கர் தலைமையிலான  போலீசார் பெருந்திட்டவளாகம் அருகே தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, எங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க நடவடிக்கை  எடுத்து வருவதாகவும், அதனை தடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார்  அறிவுறுத்தலின்பேரில், ஆட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.  அதில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கிராம ஊராட்சி புதிதாக  உருவாக்கப்பட்ட திருவெண்ணைநல்லூர் தாலுகாவோடு இணைத்து விழுப்புரம்  மாவட்டத்தோடு வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் கிராமத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க போவதாக தகவல் வந்துள்ளது. திருவெண்ணைநல்லூர் ஒன்றியம்,  அரசூர்குறுவட்டத்தில் எங்கள் கிராமம் உள்ளது.
எங்களுடைய தாய் கிராமமாக  கருவேப்பிலைப்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மற்றும்  சிரத்தனூர், கருவேப்பிலைபாளையம் ஆகிய இரண்டையும் சேர்த்து தனி ஊராட்சியாக  வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி  எங்கள் கிராமம் திருவெண்ணைநல்லூர் தாலுகாவோடு, விழுப்புரம் மாவட்டத்திலேயே  செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kandalavadi ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...