×

தென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை

கள்ளக்குறிச்சி, டிச. 13: கள்ளக்குறிச்சிக்கு தென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக விநியோகம் செய்வதில்லை என்று நுகர்வோர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. சார் ஆட்சியர் காந்த் தலைமை தாங்கினார். நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசுகையில் கள்ளக்குறிச்சிக்கு தென்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் முறையாக மக்களுக்கு விநியோகம் செய்வது இல்லை. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் புதியதாக உள்ள தெருவில் தெரு மின்விளக்கு அமைக்கப்படவில்லை குறிப்பாக கேஆர்ஜி நகர், சப்தகிரி நகர், எம்ஆர்என் நகர் ஆகிய பகுதியில் மின்விளக்கு அமைக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு பதிவேட்டில் சிலவற்றை நிலங்கள் பதிவு செய்ததில் குளறுபடியாகேவே உள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்றார். மேலும் நுகர்வோர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். அப்போது சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் பேசுகையில் கூட்டத்தில் தெரிவிக்கபட்ட புகார்கள் அனைத்தும் அந்தந்த துறை அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி  தொழிலாளர் உதவி ஆய்வாளர் சார்லி, தனி வட்டாட்சியர் பாண்டியன், உதவி மின் பொறியாளர் தமிழரசன், கள்ளக்குறிச்சி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தாமரைசெல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேலு, சந்திரசேகரன், ரங்கசாமி, முருகன் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் முருகன், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை