×

நரசுஸ் சாரதி கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

சேலம், டிச.12: சேலம் நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரியில் சிஓ, பிஓ, பிஎஸ்ஓ மற்றும் பிஇஓ மதிப்பிடல், அடைதல் மற்றும் பயனுள்ள கற்பித்தல் கருவிகள் என்ற தலைப்புகளில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. நிகழ்ச்சி கல்லூரி தலைவர் நிதிஷ்ஹரிஹர், இணை தலைவர் ஐஸ்வர்யா நிதிஷ், துணை தலைவர் பிரபாகரன் மற்றும் முதல்வர் முனுசாமி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. முதல்நாள் ஆசான் எடுக்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆலோசகர் மகாதேவன் தலைமை பயிற்சியாளராக பேராசிரியர்களுக்கு, தேசிய அங்கீகார வாரியம் எதிர்பார்க்கும் படதோட்ட முறைகளை பற்றியும், அதை செயல்படுத்தும் முறைகளை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். அதை தொடர்ந்து, இரண்டாம் நாள் ஆர்ஆர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ராகவேந்திரா புதுமையான படம் கற்பித்தல் முறைகளை பற்றியும், வகுப்பறையில் ஏற்படும் இடர்களை சீர்செய்யும் முறைகளை பற்றியும் பயிற்சியளித்தார். இப்பயிற்சியில், கல்லூரியின் அனைத்து போரசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Narasu Driving College ,
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்