தாலுகா மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வருடாந்திர ஆய்வு

சேலம், டிச.12: மேட்டூர் தாலுகா மருத்துவமனையில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவர் சரவணகுமார் வருடாந்திர ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில், கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 920க்கும் மேற்பட்ட வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 40 ஆம்புலன்ஸ் வாகனங்களும், மலை கிராம பகுதிகளுக்கு எளிதில் செல்ல நான்கு சக்கர வாகனங்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய இன்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களும் உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலுதவி வசதி, அவசர கால மருத்துவ உதவியாளர், வென்டிலேட்டர். இ.சி.ஜி. மற்றும் மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்கள் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன்படி மேட்டூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஆகியவை நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆய்வு செய்தார்.

Related Stories: