ஆத்தூர் அருகே பிராமணர்கள் வினோத வழிபாடு

ஆத்தூர், டிச.12:ஆத்தூர் அருகேயுள்ள ஒதியத்தூர் கிராம மலையடிவாரத்தில், கருப்பணார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீவிருபாட்ஷீஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை மற்றும் பிராமணர்கள் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கருப்பணாரை விருபாட்ஷீஸ்வரராக உருவகப்படுத்தி ருத்ராபிஷேகம், தீபாராதனை மற்றும் பிராமண சந்தர்பணை உள்ளிட்டவைகளை செய்தனர். தொடர்ந்து, எச்சில் இலைகளின் மீது உருளுதண்டம் போட்ட பிராமணர்கள்  அதன்பின் அந்த இலைகளை தலையில் சுமந்து சென்று, குப்பையில் போட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் சேலம், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பிராமணர்கள் மற்றும் ஆத்தூர், மஞ்சினி, ஒதியத்தூர், வளையம்மாதேவி, நடுவலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: