அரியானூரில் சாலை நடுவே டிவைடரை கடக்கும் வாகனங்களால் அபாயம்

ஆட்டையாம்பட்டி, டிச.12:  சேலம்-கோவை செல்லும் பைபாஸ் சாலையில், அரியானூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து  ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன், 45 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்நிலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களை போக்குவரத்துக்காக மாற்றியமைத்து மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணியால், அரியானூரில் இருந்து சேலம் செல்ல 1 கி.மீ தூரம் சென்று திரும்பி வரவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் டிவைடரில் ஏறி, ஆபத்தை உணராமல் பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த இடத்தில் சாலையை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், டிவைடரில் ஏறி செல்லாதவாறு தடுக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: