×

எக்ஸல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி துவக்கம்

குமாரபாளையம், டிச.12: குமாரபாளையம் எக்ஸல் கல்வி குழுமத்தில், புதிதாக ஹோமியோபதி மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டுள்ளது என துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பொறியியல், மருந்தியல், சித்த மருத்துவம், பிஸியோதெரபி, யோகா, பாலிடெக்னிக், கல்வியியல் உள்ளிட்ட கல்லூரிகள், ஒரே வளாகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் மிகுந்த அனுபவமிக்க பேராசிரியர் நடேசன் தலைமையில் செயல்பட்டு வரும் எக்ஸல் குழுமங்களின் மாணவ, மாணவிகள், சிறப்பாக படித்து பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரவரிசைகளை பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டு ஹோமியோபதி மருத்துவ படிப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்தரை ஆண்டு காலம் கொண்ட இந்த படிப்பில் முதல் நான்கரையாண்டுகள் கல்லூரி படிப்பும், ஒரு வருடம் சுழற்சி செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர மாணவ, மாணவிகள் பிளஸ்2 பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களுக்கு கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Excel Homeopathy Medical College ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு