×

வேப்பனஹள்ளி அருகே கஞ்சா விற்ற பெண்கள் கைது

வேப்பனஹள்ளி, டிச.12: வேப்பனஹள்ளி அருகே தீர்த்தம் கிராமத்தில் கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். வேப்பனஹள்ளி அருகே தீர்த்தம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த மல்லப்பா மனைவி ஜெயம்மா (60), திம்மராயப்பா மனைவி மாரக்கா (55) ஆகியோர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Women ,Veppanahalli ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...