×

தர்மபுரி டான்போஸ்கோ கல்லூரி மாணவர்களுக்கு ₹6.60 லட்சம் உதவித்தொகை

கிருஷ்ணகிரி, டிச.12:  தர்மபுரி டான்போஸ்கோ கல்லூரியில் பயிலும் 101 மாணவர்களுக்கு ₹6.60 லட்சம் கல்வி உதவித்தொகையினை ஐவிடிபி நிறுவனர் வழங்கினார்.  கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு ₹10 ஆயிரம், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு ₹6 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு, தர்மபுரி டான்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 93 மாணவர்களுக்கும், டான்போஸ்கோ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் 8 மாணவர்களுக்கும், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.

 நிகழ்ச்சிக்கு ஐவிடிபி நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று, 101 மாணவ, மாணவிகளுக்கு ₹6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ₹1 கோடியே 29 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, எதிர்காலத்தில் தங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும்,’ என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, டான்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிலுவைமுத்து, ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Dharmapuri Danbosco College ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது