×

மாவட்ட தடகள போட்டிகளில் சூளகிரி அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

சூளகிரி, டிச.12: சூளகிரி அரசு பள்ளி மாணவிகள், மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சூளகிரி வட்டார அளவிலான 14, 17, மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தடகள போட்டிக்கு 2 மாணவிகளும், சதுரங்க போட்டிக்கு 2 பேரும், மேசைப்பந்து போட்டிக்கு 2 பேரும், சிலம்ப போட்டிக்கு 4 பேரும், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு ஒரு மாணவி என மொத்தம் 12 மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ், பள்ளி தலைமையாசிரியர் நாகவல்லி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், உபதலைவர், பொருளாளர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

Tags : Government School Students Win District Athletics Tournament ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்