மருதம் நெல்லி பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, டிச.12: தர்மபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தர்மபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் சென்னை ஹூண்டாய் நிறுவனத்தினர் கலந்து கொண்டு, இயந்திரவியல் மற்றும் மின்னியல், மின்னணுவியல் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னை ஹூண்டாய் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பினை வழங்கினர். இந்த முகாமில், பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பினை பெற்றனர். வேலைவாய்ப்பினை பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், தாளாளர் கோவிந்த், முதல்வர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Placement Camp ,Marutham Nelly Polytechnic ,
× RELATED நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்