×

பென்னாகரம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

பென்னாகரம், டிச.12: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில், உலகத் தமிழாசிரியர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா, சென்னையில் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிக்கு, ‘இயக்க கல்வியாளர் விருது’ வழங்கப்பட்டது.

வருடந்தோறும் சமூகப்பணி, புதிய பாட நூல்களை உருவாக்கும் குழு உறுப்பினர், கல்வி தொழில்நுட்பங்களை மாணவர்களிடையே புகுத்துதல், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், வயது வந்தோர் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, ஒடிசா மாநில அரசு தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Head of State School ,Pennagaram ,
× RELATED விருதுநகரில் மாணவி மாயம்