×

பாரதியார் பிறந்த நாள் விழா

தர்மபுரி, டிச.12: தர்மபுரியில் பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரியில், தனியார் பள்ளியில் பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. விழாவில் பாரதியார் தமிழ் மன்ற தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சுதாகரன், பாரத மாதா ஆன்மீக சேவை மையம் பொருளாளர் சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி குழந்தைகளுக்கு பாரதி முத்தமிழ் மன்ற இணை தலைவர் கருணாநிதி இனிப்பு வழங்கினார். பாரதி முத்தமிழ் மன்ற பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார். தர்மபுரி செங்கொடிபுரத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர் அமைப்பினர் சார்பில், பாரதியார் 138வது பிறந்ததின விழா நடந்தது. விழாவில் பாரதியார் உருவப்படத்துக்கு மாலைவைத்து மரியாதைசெலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிசுபாலன், ராமச்சந்திரன், நகரசெயலாளர் ஜோதிபாசு, முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடத்தூர்: கடத்தூர் கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கடத்தூர் வாசகர் வட்ட பொருளாளர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். நூலகர் சரவணன் வரவேற்றார். கடத்தூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி முன்னிலை வகித்தார். பாரதியாரின் 138வது பிறந்தநாளை முன்னிட்டு, 138 மாணவ மாணவியர் பாரதியார் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டியில் வெற்றி ெபற்ற மாணவ, மாணவிகளுக்கு புலவர் நெடுமிடல், பொறியாளர் கணேசன் ஆகியோர் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

Tags : Bharatiyar ,Birthday Party ,
× RELATED முக்கூடல், கடையத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா