×

விபத்தில் இன்ஜினியர் சாவு

தர்மபுரி, டிச.12: கோவை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (33). இன்ஜினியரான இவர் நேற்று முன்தினம், சொந்த வேலை காரணமாக, அவரது டூவீலரில் கோவையில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். வேலைகளை முடித்து விட்டு, தர்மபுரி வழியாக கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரியை அடுத்த பென்னாகரம் மேம்பாலம் அருகே வந்த போது, சென்டர் மீடியனில் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, வினோத் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பைக் விபத்தில் வாலிபர் பலி