×

சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, டிச.12: பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பி.சி., எம்பிசி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும், தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளில், குடும்ப ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக, ஒருவருக்கு ஆண்டிற்கு ₹2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இக்கல்வி உதவித்தொகை பெற, தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள், பட்டியலிடப்பட்ட மத்திய  அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் குறித்து, தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா