×

உத்தமபாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம்

உத்தமபாளையம், டிச.12: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று தேர்தலில் போட்டியிட ஆர்வமாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. 10 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன. இதில் போட்டியிடுவதற்காக கடந்த 3 நாட்களாக ஆர்வம் இல்லாத நிலையில் நேற்று ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி ராயப்பன்பட்டிக்கு 2, கோகிலாபுரம் 2, டி.மீனாட்சிபுரம் 2, உ.அம்மாபட்டி கிராமஊராட்சி என வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் ஆர்வமாக தாக்கல் செய்யப்பட்டன. காலை வரை 3 பேர் தாக்கல் செய்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `` தொடர்ந்து வரும் நாட்களில்அதிகமான அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதால் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : elections ,Uthamapalayam ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...