×

தேனி மாவட்டத்தில் 3வது நாளில் 352 பேர் வேட்புமனுத்தாக்கல்

தேனி, டிச. 12: தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில் மூன்றாம் நாளான நேற்று 352 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27ம் மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்க உள்ளது. மூன்றாம் நாளான நேற்று ஆண்டிபட்டி ஒன்றித்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 22 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 55 பேரும், க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 54 பேரும், பெரியகுளம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 பேரும், தேனி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேரும், போடி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 20 பேரும், சின்னமனூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 பேரும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சிமன்றத் தலைவர்பதவிக்கு 12 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், கம்பம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேருமாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் நேற்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 80 பேரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 268 பேருமாக மொத்தம் 352 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Tags : district ,Theni ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!