×

. மூணாறு அருகே கரும்பு தோட்டங்களை நாசம் செய்யும் குரங்குகள் விவசாயிகள் கலக்கம்

மூணாறு,டிச .12:மூணாறு அருகே மறையூர் பகுதியில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ள தோட்டங்களின் குரங்குகள் புகுந்து கரும்புகளை துவசம் செய்தது. இதனால் கரும்பு விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மூணாறில் அருகே உடுமலை செல்லும் பகுதியில் அமைந்துள்ளது மறையூர் பகுதி. இங்கு கரும்பு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் மூணாறு மற்றும் கேரளத்தில் உள்ள பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பைப் பயன்படுத்தி வெல்லம் போன்றவை தயார் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கரும்பு தோட்டங்களில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. முன்பு வனப்பகுதிகளில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு படையெடுக்கும் குரங்கு கூட்டங்கள் மலை நேரங்களில் வனத்திற்கு செல்வது இயல்பானதாகும். ஆனால், தற்போது கரும்பு தோட்டங்களில் அமைந்துள்ள மரங்கள் மற்றும் மதில் சுவர்களில் குரங்குகள் குடியிருந்து கொண்டு கரும்புகளை நாசம் செய்து வருகிறது. மேலும் 1 ஏக்கர் கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ள இடங்களில் 25 சென்ட் இடத்தில் உள்ள கரும்புகளை குரங்கு கூட்டம் துவசம் செய்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மறையூர் பகுதிகளில் முக்கிய கரும்பு விவசாய பகுதிகளான மேலாடி,கொச்சுபுறம்,கரிமூட்டி காலனி,கூடவயார் போன்ற பகுதிகளில் 100க்கும் அதிகமான குரங்குகள் கூட்டமாக சென்று கரும்புகளை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் கூறியுள்ளார். இவற்றின் தொல்லையில் இருந்து து விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பதுடன், குரங்குகளைக் கட்டுப்படுத்த வனத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Tags : Peasants ,sugarcane plantations ,Munnar ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு