×

சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்

சிவகங்கை, டிச. 12: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை) விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம சார்பில் தெரிவித்துள்ளதாவது: மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15ம் நாள் மூன்றாம் பாலினத்தவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறந்து விளங்கும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு சிறந்த மூன்றாம் பாலினத்தவர் விருது மற்றும் பரிசுத்தொகை ரூ. ஒரு லட்சம் வழங்கப்படுகிறது.

மூன்றாம் பாலினத்தவர்களில் அரசின் ஆதரவில்லாமல் தனது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தியவர்கள். தனது சிறந்த சேவை மூலம் குறைந்தது 5 மூன்றாம் பாலினத்தவர்களை கண்ணியமான வழியில் வழிநடத்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில் உறுப்பினர் அல்லாதவர்களாக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதியுடைய மூன்றாம் பாலினத்தவர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சி சிறப்பு கருத்தரங்கு

சிவகங்கை, டிச. 12: சிவகங்கை அருகே மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் முருகன் தலைமை வகித்தார். முதல்வர் மலர்விழி வரவேற்றார். அக்கு பஞ்சர் மருத்துவர் கமலக்கண்ணன், அக்குபஞ்சர்ஹீலர் இளவரசி ஆகியோர் தலைமை வகித்தனர். கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், நகர நாகரிகம், கட்டிடக்கலை, வேளாண்மை, சுடுமணல் தொழில் நுட்பம், உறை கிணறு குறித்தும், அகழ்வாராய்ச்சியின்போது வெளியான செய்தி, படங்கள் கண்காட்சி மூலமும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மாணவி அகல்யா நன்றி கூறினார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்