×

பொறியியல் படித்தவர்கள் ஆசிரியர்கள் ஆகலாம் அமைச்சர் அறிவிப்பிற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்

காரைக்குடி, டிச. 12: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தெரிவித்துள்ளதாவது,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பி.இ பட்டம் பெற்ற பொறியாளர்கள் பி.எட் பயிற்சி முடித்து ஆசிரியராக பணியில் சேரலாம் என அறிவித்துள்ளது முற்றிலும் முரண்பாடானது. பள்ளிக்கல்வியில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் பட்டம் பெற்று பி.எட், எம்.எட், பட்டங்கள் பெற்றுள்ள பல ஆயிரக்கணக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தவிர தேர்வுவாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதியடைந்த நியமனத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆசிரியர் நியமனத்துக்கு தகுதிவாய்ந்தோர் கிடைக்கப்பெறாத நிலையும் இல்லை. இவையெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்தும் வேறு துறையில் பணியாற்றிட தகுதி வாய்ந்தோரை கல்வித்துறையில் பணியேற்க வாருங்கள் என அழைப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதனை ஆசிரியர் கூட்டணி கடுமையாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Tags : Teachers coalition ,minister ,announcement ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...