×

பாரதியார் பிறந்த நாள்

தொண்டி, டிச. 12: தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் நேற்று பாரதியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஆசிரியை பொன் சாந்தி தலைமை வகித்தார். சுமதி முன்னிலை வகித்தார். ராமநாதன் வரவேற்றார். ஆசிரியை மரிய லீலா, செங்கோல் பாரதியின் வாழ்கை வரலாறு, கவிதைகள் குறித்து பேசினர். தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் பேசுகையில், ‘பாரதியின் கனவான பெண்கள் முன்னேற்றம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் பயனாக இந்நிழ்ச்சிக்கு ஆசிரியைகளே தலைமை வகிக்கின்றனர். வரும் காலங்களில் பெண்கள் முன்னேற்றம் வளர்ச்சியடையும்’ என்றார். ஆசிரியை ஞான செலவி நன்றி கூறினார்.

Tags : Birthday ,Bharathiar ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...