உடல்வளர்ச்சி குன்றிய 2 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

திருவேங்கடம், டிச. 12: குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் உடல் வளர்ச்சி குன்றிய 2 மாணவர்களுக்கு திமுக மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கடற்கரை, ஊராட்சி செயலாளர் செந்தில், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமார்சங்கர், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யா சுரேஷ், வார்டு செயலாளர் முனியாண்டி, முன்னாள் பஞ். தலைவர் ரவிச்சந்திரன், வார்டு செயலாளர்கள் மாரிச்சாமி, பாண்டி, துரைப்பாண்டி, பிரதிநிதி சுப்பிரமணியன், ராயப்பன், இளைஞரணி கோட்டூர்சாமி, பாத்திரக்கடை சுப்பாராஜ், சீனிவாசன், சம்பகுளம் ஜெய்சங்கர், கொக்குகுளம் கண்ணன், களப்பாளங்குளம் சுந்தரபாண்டியன், கணேசன், வேல்முருகன், குருசாமி, குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீவலமுத்து, உட ற்கல்வி ஆசிரியர்கள் கென்னடி, மாடசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>