நாங்குநேரி கோயிலில் சொக்கப்பனை ஏற்றம்

நாங்குநேரி, டிச. 12:  நாங்குநேரி பெருமாள் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை விழா முன்னிட்டு நாங்குநேரி பெருமாள் கோயிலில் வானமாமலை பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. அதிகாலையில் கோயிலின் உள்பகுதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் சுவாமி, தாயாருடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஏற்றப்பட்டது. சொக்கப்பனை  எரிந்த பிறகு அதிலுள்ள கனிந்த  கட்டைகளை விவசாயிகள் எடுத்துச் சென்றனர். சொக்கப்பானையில் எரிந்த கரி கட்டைகள் புனிதமானவை என்றும், அவற்றை வயலில் நட்டு வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது எனவும் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலையில் சுவாமி புறப்பாடு, நீராஞ்சனம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: