மூதாட்டி வீட்டில் ரூ.80 ஆயிரம் நகை திருட்டு

நாங்குநேரி, டிச. 12: மூலைக்கரைப்பட்டி அருகே தெய்வநாயகப்பேரியை சேர்ந்த வேலாயுதம் மனைவி மாடத்தி (75). இவரது 2 மகன்களும் திருமணமாகிவிட்டது. இதனால் மாடத்தி, கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று ெவளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த செயின், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன் நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். விசாரணையில் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த குளத்தூரான் மகன் ஆறுமுகம் என்பவர் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகாரின்பேரில் மூலக்கரைப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிந்து தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: