×

3ம் நாளாக வேட்புமனு தாக்கல் தூத்துக்குடி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை, டிச. 12: புதுக்கோட்டையில் செயல்படும் தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 3வது நாளாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த கடந்த 9ம் தேதி துவங்கியது. இதில் புதுக்கோட்டையில் செயல்படும் தூத்துக்குடி ஒன்றிய அலுவலகத்திலும் உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திம்மராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆவுடையம்மாள், முன்னால் கவுன்சிலர் ராமசாமி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல் வடக்குசிலுக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன், பிச்சிரோஸ் ஆகியோரும், மறவன்மடம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு  ஜோதி பொன்மலர், குலையன்கரிசல் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பிரதிபா ஜெகன், கட்டாலங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சங்கரேஷ்வரி, முடிவைத்தானேந்தல் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரம்யா, மேலத்தட்டபாறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஐகோர்ட் மஹாராஜா ஆகியோரும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுடலை உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் நடந்தது. இந்நிலையில் தூத்துக்குடி ஒன்றியத்திற்கு நேற்று காலை திடீரென வருகை தந்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Tags : collector inspection ,Tuticorin Union ,
× RELATED தூத்துக்குடி யூனியன் கூட்டம்