ஆறுமுகநேரி வேதாகம பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் புத்தாடை வழங்கல்

ஆறுமுகநேரி, டிச. 12: ஆறுமுகநேரி பிஷப் அசரியா வேதாகம பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.    ஆறுமுகநேரி காமராஜபுரத்தில் உள்ள பிஷப் அசரியாக வேதாகமப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.  கேரளா- கன்னியாகுமரி பேராயர் டாக்டர் சாம் ஏசுதாஸ் தலைமை வகித்துப் பேசினார். குருவானவர் விக்டர்ராஜா ஆரம்ப  ஜெபம் செய்தார். கிருபை  அந்தோணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இசிஐ ஆடிட்டர் அற்புதராஜ், டாக்டர் ஜெயசிங் தேவ செய்தி வழங்கினர். பிஷப் அசரியா  வேதாகமப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை டி.எஸ்.  குரூப் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். இதைத்தொடர்ந்து ஏழை குடும்பத்தினர் 200 பேருக்கு இலவச புத்தாடை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இசிஐ பிலோமி நகர்  குருவானவர் பாலன் தாமஸ், பாஸ்டர் லாரன்ஸ், பாஸ்டர் ஜெயபாண்டி, சகோ.  சாக்ரடீஸ், குருவானவர்கள் சுபாஷ், அற்புதராஜ் மற்றும் சபை மக்கள் என  ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளையும் இசிஐ நெல்லை மற்றும்  தூத்துக்குடி சேர்மனும் இயக்குநருமான குருவானவர் அந்தோணி மற்றும்  வேதாகமப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

Related Stories: