குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு டிஐஜி தொடங்கி வைத்தார் இன்றைய நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் 3 ஆண்டு போட்டியிட தடை செலவு கணக்கு சரியாக வந்து சேரணும்

மதுரை, டிச.12: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஊராட்சி தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடுபவர்கள் ரூ.9 ஆயிரமும், ஊராட்சி மன்ற தவைர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.34 ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் செலவு செய்யலாம். இந்த செலவு கணக்கினை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. உள்ளாட்சி தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை அனைத்து கட்சியினரும் பின்பற்ற வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தலைவர்கள் பிரச்சாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவித்து முன் அனுமதி வாங்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு அரசியல் கட்சியினரின் முகவர்களை நியமித்தல் வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் கட்சியினர் கூறும்போது, ‘‘வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அதற்காக பந்தல் போட வேண்டும். மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே கூட்டி இருக்க வேண்டும்’’ என்றனர். இதற்கு கலெக்டர், ‘‘பந்தல் போட நடவடிக்கை எடுக்கப்படும். மாநில தேர்தல் ஆணையத்திலிருந்து உரிய உத்தரவு வராததால் குறிப்பிட்ட காலத்தில் அந்த கூட்டம் போட முடியவில்லை’’ என்றார்.

கூட்டத்தில்  கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) வீராச்சாமி, ஆவின் பொதுமேலாளர் ஜனனிசௌந்தர்யா, மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகளும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜவஹர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)

Related Stories: