×

மக்கள் ஆவேசம் வேட்பாளர்கள் ஓட்டு கேட்க சாதி, மத உணர்வை பயன்படுத்த கூடாது

மதுரை, டிச.12: தேர்தலில் வாக்காளருக்கு லஞ்சம், வெகுமதி கொடுக்க கூடாது. மதம், சாதி, இனம் அடிப்படையில் வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ வேண்டுகோள் விடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில், வேட்பாளர்கள், சாதி, மத, மொழி இன உணர்வுகளை அதிகப்படுத்தவோ, கொந்தளிப்பை ஏற்படுத்தும் செயலிலோ ஈடுபடக்கூடாது. கோயில், மசூதிகள், தேவாலயங்கள் பிற மத வழிபாடு தலங்களில் பிரச்சாரம் செய்ய கூடாது. அரசியல் கட்சியின் கொள்கை, திட்டங்கள், கடந்த கால திட்ட பணிகள் குறித்து பிரச்சாரம் இருக்க வேண்டும். தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் பொது வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடாது. தனி நபருக்கு எதிராக போராட்டம் கூடாது. விதிமுறைகளை அரசியல் கட்சிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வாக்காளருக்கு லஞ்சம், வெகுமதி கொடுக்க கூடாது, வாக்காளர்களை வற்புறுத்தல், அச்சுறுத்துதல், தேவையற்ற செல்வாக்கை அவர்களிடம் பயன்படுத்துதல், வாக்குரிமையில் தலையிடக்கூடாது. மதம், சாதி, இனம் அடிப்படையில் வாக்களிக்கவோ அல்லது வாக்களிக்காமல் இருக்கவோ வேண்டுகோள் விடக்கூடாது. மதச்சின்னத்தை தேசிய கொடி, தேசிய முத்திரையை பயன்படுத்த கூடாது. வாக்காளர்களை பூத்துக்கு அழைத்து செல்லக்கூடாது. மதுபானங்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கப்படும் கூட்டத்தை ஏற்பாடு செய்யவோ நடத்தக்கூடாது.  சுவரொட்டியில் வெளியீட்டாளர் பெயர் இருக்க வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஆதரவு கோரக்கூடாது. வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தல் கூடாது. பொதுக்கூட்டம், ஊர்வலத்தில் தேவையற்ற வகையில் தடை ஏற்படுத்த கூடாது. உள்ளூர் அதிகாரிகள் அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது. அதற்காக முன் அனுமதியை  பெற வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு பின் முகாம் அலுவலகம் அமைக்க வேண்டும். அதில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளது.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு