நத்தம் ஒன்றியத்தில் 179 வாக்குச்சாவடிகள்

நத்தம், டிச. 12: நத்தம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 52 ஆயிரத்து 882 பேரும், பெண் வாக்காளர்கள் 53 ஆயிரத்து 524 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 421 பேர் உள்ளனர். இதில் பஞ்சாயத்து தலைவர் 23, ஒன்றிய கவுன்சிலர் 20, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 222, மாவட்ட கவுன்சிலர் 2 ஆகிய பதவிகளுக்கு போட்டியிட இருக்கிறார்கள். இங்கு மொத்தம் வாக்குச்சாவடிகள் 179 உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் டிச.9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. எனினும் நத்தம் யூனியன் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு செந்துறைக்கு சவரிமுத்தும், குடகிப்பட்டிக்கு அரவிந்தனும், ஆவிச்சிபட்டிக்கு ஆனந்தியும், சிறுகுடிக்கு விஜயலட்சுமியும், செல்லப்பநாயக்கன்பட்டிக்கு சவுந்தரராஜனும் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பெரும்பாலான தலைவர் பதவிகளுக்கு அந்தந்த ஊரை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவங்களையும் வாங்கி சென்றனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வேகம் சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் வேட்புமனு தாக்கலின் போது யூனியன் அலுவலகத்தின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்தல்களை பிரித்து 2 நாட்களாக வைப்பதாலும் முதற்கட்டமாக ஊராட்சிகளுக்கு மட்டுமே வைப்பதால் இந்த தேர்தல் களம் முற்றிலும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமின்றி காணப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் விறுவிறுப்பு என்பது போக போக தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: