×

நத்தம் கோயில்களில் தீப திருவிழா

நத்தம், டிச. 12: நத்தம் மாரியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலின் உள், வெளி பிரகாரங்களில் கார்த்திகை விளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலிலும் பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் பகவதியம்மன், காளியம்மன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கார்த்திகை விளக்குகளை ஏற்றினர்.

Tags : Deepam ,festival ,Natham ,temples ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...