×

திண்டுக்கல் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணர்வு

திண்டுக்கல், டிச. 12: திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் நடந்த காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை சூப்பிரண்டு வினோத் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு போலீசார் காவலன் செயலின் செயல்முறைகள், அதனை எவ்வாறு பயன்படுத்துவது, ஆபத்து காலங்களில் அதன் பயன்பாடு குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து சூப்பிரண்டு சக்திவேல் பேசுகையில், ‘தற்போதைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு மிகவும் அவசியமானது. பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலியின் பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்’ என்றார். மேலும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Police Activist ,Dindigul College of Women ,
× RELATED ராணியார் அரசு மகளிர் பள்ளியில் காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி