×

நெற்பயிர்களில் ரெட்டியார்சத்திரம் அருகே பனை விதை நடும் விழா

ஒட்டன்சத்திரம், டிச. 12: ரெட்டியார்சத்திரம் அருகே கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளக்கரையில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சுமார் 25 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவங்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை மூலம் பெறப்பட்ட பனை விதைகள் கரைகளை பாதுகாத்தல், மண் சரிவை தடுத்தல், ஆக்கிரமிப்பை தடுத்தல் மற்றும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவு, 2 கிமீ சுற்றளவு கொண்ட குளத்தின் கரையில் நடப்பட்டு வருகின்றன. இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோகுல கண்ணன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சீனிவாசன், விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி மற்றும் தோட்டக்கலை முதலாம் ஆண்டு மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Rettiyasatram ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா