827 பேர் வேட்புமனு கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தல் கொடைக்கானலில் பாராகும் பார்க்கிங் ஏரியா

கொடைக்கானல், டிச. 12: கொடைக்கானல் அண்ணாசாலை வாகன நிறுத்துமிடம் திறந்தவெளி பாராக மாறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் அண்ணாசாலையில் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ளது நகராட்சி வாகன நிறுத்துமிடம். முன்பு பயன்படாமல் இருந்த கழிப்பறை, குப்பைகள் சேகரிக்கும் இடமாக இருந்த இப்பகுதியை கொடைக்கானல் நகராட்சி சீரமைத்து வாகன நிறுத்துமிடமாக அமைத்தது. இந்த வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகாமையில் டவுன் பள்ளிவாசல், தாலுகா அலுவலகம், காய்கறி மார்க்கெட், காவல்நிலையம் ஆகியவை உள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனாலே இப்பகுதியை வாகன நிறுத்துமிடமாக நகராட்சி மாற்றி அமைத்தது. இந்நிலையில் தற்போது இப்பகுதி திறந்தவெளி பாராக மாறி உள்ளது. இப்பகுதிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் இந்த இடத்தில் பொறுமையாக அமர்ந்து குடித்து விட்டு கும்மாளமிட்டு வருகின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள், மாணவிகள் கடந்து செல்லவே மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர். எனவே போலீசார் திறந்தவெளியில் மது குடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: