×

தட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.12: தட்சன்குளம் படித்துறையை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி வேதை சாலையில் அமைந்துள்ள தட்சன்குளம் கடந்த ஆண்டு வரை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழையினால் குளம் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

ஆனால் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த 5 படித்துறைகளும் சேதமடைந்து புதர்கள் மண்டி பயன்படுத்த முடியாமல் உள்ளது. இக்குளத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் இக்குளத்தை குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். படித்துறை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் படித்துறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dakshinkulam Ghat ,
× RELATED வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்கலாம்