×

அச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்

முத்துப்பேட்டை, டிச.12: முத்துப்பேட்டையில் தலைவர் பதவிக்கு 8பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 45 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் வரும் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுகிறது. அதற்காக முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள 29ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் மனு அளிக்க அறை எண் -1, 15ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் மனு அளிக்க அறை எண் -2, 2மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் மனு அளிக்க அறை எண்- 3ல் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அனைத்திலும் தனிதனி அலுவலர்கள் உள்ளனர். அதேபோல் 29கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர்களுக்கு மனுக்கள் வாங்க அலுவலர்கள் நியமனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் திடீரென்று திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்த அடுத்த நிமிடமே வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வர துவங்கினர். இதனால் ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின்னர் திமுக உட்பட எட்டு 8பேர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்தனர். இதில் பின்னத்தூர் ஊராட்சிக்கு சுயேச்சைகள் சுப்பையன், தனிக்கொடி, ஆரியலூர் ஊராட்சிக்கு சுயேட்சைகள் மணிக்கண்டன், முருகானந்தம், சங்கேந்தி ஊராட்சிக்கு சுயேட்சை நாகராஜன், தோலி ஊராட்சிக்கு சுயேச்சை இலக்குவன், உப்பூர் ஊராட்சிக்கு சுயேட்சை கணபதி, உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு திமுக சசிகலா(50) ஆகிய 8பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஒன்றியத்தில் மொத்தம் 45 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags : election ,
× RELATED கொரோனா தடுப்பூசி குறித்து...