×

முத்துப்பேட்டை அருகே வடிகால் ஆக்கிரமிப்பால் 20 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி அழுகியது

முத்துப்பேட்டை, டிச.12: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 20 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் சாகுபடி நிலம் அதிகளவில் உள்ளது. இதில் பரவலாக அனைத்து பகுதியிலும் சம்பா, தாளடி சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. இதில் நெற்பயிர்கள் 70 நாட்களைத் தாண்டி செழுமை கண்டுள்ளது. இந்நிலையில் பயிர்களை ஒருவார காலமாக பெய்த கனமழைநீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழைவிட்டும் ஒரு வாரமாகியும் தாழ்வாக உள்ள பகுதியில் மழைநீர் வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி பயிர்கள் பிழைக்குமா? பிழைக்காத என்ற கேள்வி குறி எழுந்துள்ளது. இந்நிலையில் மழை விட்டுள்ள நிலையில் தங்கள் பங்கிற்கு ஆனை கொம்பன் இலைசுருட்டு புழு, கூண்டுப்புழு உள்ளிட்ட பூச்சிநோய் தாக்குதல் பரவலாகி பயிர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமளித்தும் பாதிப்புகளால் மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகிள்ளது. இப்படி இப்பகுதி விவசாயிகளின் சோதனை ஒரு பக்கம் இருக்க பல இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள சாகுபடி வயலில் சமீபத்தில் பெய்த மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் இன்னும் இரண்டொரு நாளில் பயிர்கள் அழுகி வீணாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஆதிக்குட்டிகாடு கிராமத்தில் இந்தாண்டு இப்பகுதி விவசாயிகள் 500 ஏக்கர் சம்பா சாகுபடி செய்து இருந்தனர்.

இதில் இப்பகுதி பாசனத்தை பெற்றுதந்த பிலாவர் ஓடை என்ற வாய்க்கள் நெடுவேங்கும் ஆக்கிரமிப்பால் சூழ்ந்ததால் சமீபத்தில் பெய்த மழைநீர் வடிய வழியின்றி சாகுபடி வயலில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சுமார் 15தினங்களுக்கு மேலாக பயிரை தண்ணீர் சூழ்ந்ததால் சுமார் 20ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி அழுகி வீணாகியது. இதனால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதே நேரத்தில் இப்பகுதி பிலாவர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் வரை புகார் அனுப்பியுள்ளனர். ஆனாலும் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. அதனால் வரும் ஆண்டிலாவது இந்த ஆக்கிரமிப்புகளை அரசு எடுக்க வேண்டும். தற்பொழுது நீரில் மூழ்கி வீணாகிய பயிருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mutupet ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...