×

நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரப்போத்துகள் துளிர்த்தது

மன்னார்குடி, டிச.12: கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை இணைந்து கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி உலக மாணவர்கள் தினத்தில் மன்னார்குடி முதல் நீடாமங்கலம் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு மரப்போத்துக்களை நட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள், சாலைப் பணியாளர்கள், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தன்னார்வலர்கள் என 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று நான்கு மணி நேரத்திற்குள் 12 கி.மீ தொலை விற்கு நெடுஞ்சாலை யின் இருபுறங்களிலும் ஆலம், ஒதியம், வாதநாராயணா உள்ளிட்ட 2100 மனப்போத்துக்களை நட்டனர். தற்போது இந்த மரப்போத்துகள் அனைத்தும் தொடர் மழையால் துளிர்த்து செழிப்பாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு மரப்போத்துக்களும் ஏழு அடி உயரத்தில் உயர்ந்து நிற்பதால் வரும் ஆண்டுகளில் நிழல் சூழ்ந்து சுற்றுச் சூழலுக்கு பேருதவியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Tags : woodworkers ,highway ,
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு