×

திருவாரூர் மாவட்டத்தில்

திருவாரூர்,டிச.12: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3வது நாளாக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் மொத்தம் 330 பேர்கள் மனு தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் , 2ம் கட்டமாக 30 ந் தேதி நீடாமங்கலம் ,வலங்கைமான், குடவாசல் ,நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் என்பது கடந்த 9ந் தேதி துவங்கியதையடுத்து மாவட்டத்தில் மொத்தமுள்ள 430 ஊராட்சிகளுக்கான தலைவர் பதவி மற்றும் இந்த 430 ஊராட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 180 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி மற்றும் 10 ஊராட்சி ஒன்றியங்களையும் சேர்ந்த 176 ஒன்றிய குழு கவுன்சிலர் பதவி மற்றும் 18 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 3 ஆயிரத்து 804 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பின்தேர்தல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேர் மற்றும் வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 130 பேர் என மொத்தம் மாவட்டத்தில் 137 பேர் மனு தாக்கல் செய்தனர். 2 வது நாளான நேற்று முன்தினம் உராட்சி தலைவர் பதவிக்கு 5 பேர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 27 பேர் என மொத்தம் 32 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் 3வது நாளான நேற்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 9வது வார்டு பதவிக்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அ.ம.மு.கவை சேர்ந்த இளவரசி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு குடவாசல் மற்றும் வலங்கைமானில் தலா 2 பேர் மற்றும் திருத்துறைபூண்டி, நீடாமங்கலத்தில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 102 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 221 பேர் என நேற்று 3வது நாளில் 330 பேர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் மெத்தம் உள்ள 3ஆயிரத்து 804 பதவிகளுக்கு 3 நாட்களில் மொத்தம் 580 பேர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : district ,Thiruvarur ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்