×

ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் வடக்குபட்டம் ஊராட்சியில் பகுதிநேர அங்காடி திறக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்

வலங்கைமான், டிச.12: வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தழுக்கு முன் பகுதிநேர அங்காடி திறக்காவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் வடக்குபட்டம் வருவாய் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரிசி உள்ளிட்ட குடிமைப்பொருட்களை தெற்கு பட்டம் ஊராட்சியில் உள்ள அங்காடிக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைக்கும் குடிமை பொருட்கள் வழங்காத நிலையில் முன்னதாக அங்காடிக்கு செல்வோருக்கு மட்டுமே குடிமை பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் வடக்குபட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் அனைத்து பொருட்களும் பெறமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே கடந்த சில மாதங்களாக வடக்குபட்டம் வருவாய் கிராமத்திற்கென தனியாக அங்காடி திறக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அதை அரசு தொடர்ந்து நிராகரித்து வந்த நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு கிராம மக்கள் வந்துள்ளனர். வடக்கு பட்டம் தனி ஊராட்சியாகவும், தனி வருவாய் கிராமமாகவும் உள்ள நிலையில் அதற்கென ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்டவை தனியாக உள்ள நிலையில் அங்காடி மட்டும் அருகில் உள்ள தெற்கு பட்டத்திற்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
முன்னதாக தெற்கு பட்டம் ஊராட்சியில் தெற்கு பட்டம் மற்றும் பயரி ஆகிய பகுதிகளில் இரண்டு அங்காடிகள் உள்ளன. எனவே வடக்கு பட்டம் ஊராட்சிக்கு என அங்கு வசிக்கும் பொதுக்களின் நலன் கருதி உடனே அங்காடி திறக்க வேண்டும். தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதை காரணம் காட்டி தட்டி கழிக்காமல் எங்களுக்கு தேர்தலுக்கு முன் உரிய உத்திரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என அப்பகுதியை பொதுமக்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : store ,elections ,
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...