நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு

சேதுபாவாசத்திரம், டிச. 12: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஆணைகொம்பன் ஈ பாதிக்கப்பட்ட திருவத்தேவன், சோலைக்காடு கிராமங்களில் உள்ள நெல் வயல்களை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் ஆய்வு செய்தார்.

அப்போது ஆனைகொம்பன் ஈ தாக்குதல் 20- 45 நாள் வயதுடைய பயிரிலும், பிபிடி 5204 ரக பயிரிலும் அதிகமாக காணப்படுகிறது ஆனைகொம்பன் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு தையோமீத்தாக்சாம் 40 கிராம் அல்லது பிப்ரோனில் 500 கிராம் மருந்துகள் மட்டும் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மேற்கண்ட மருந்துகளை கொண்டு ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் உர நிறுவனங்கள் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதிகமான பூச்சி மருந்துகளை வாங்கி அதிக பணத்தை செலவழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி, தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் சாருமதி, வேளாண்மை அலுவலர் சங்கவி உடனிருந்தார்.

Related Stories:

>