×

சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாற்றம் அரசு மருத்துவமனைக்கு ரூ.80.81 கோடி ஒதுக்கீடு

ஈரோடு, டிச.12: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.80.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகப்பெரிய அரசு தலைமை மருத்துவமனையான இந்த மருத்துவமனையை மேம்படுத்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, கடந்த மக்களவை தேர்தலின்போது பிரசாரத்திற்கு ஈரோடு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தலைமை மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, ஸ்கேன் வசதி, ஆய்வுகூட வசதி, காசநோய் மையம், மகப்பேறு பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.நோயாளிகளுக்காக 608 படுக்கை வசதிகளும் உள்ளது. இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. மேலும், கூடுதல் படுக்கை வசதிகள், 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம், உபகரணங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற ரூ.80.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.


Tags : Government Hospital ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...