அய்யப்பன் நகரில் அரசு சார்பில் வழங்கிய இலவச வீட்டுமனையை மீட்டுத்தர வேண்டும் பைராகித்தோப்பு மக்கள் கோரிக்கை

கும்பகோணம், டிச. 12: கும்பகோணம் பைராகித்தோப்பு மக்களுக்காக அய்யப்பன் நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை மற்றும் பட்டாவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தனி தாசில்தாரிடம் பைராகித்தோப்பு மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கும்பகோணம் பைராகித்தோப்பில் 60 ஆண்டுகளாக வீடுகளில் வாடகைக்கும், ஒத்திகைக்கும் வசித்து வருகிறோம். எங்களுக்காக ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1983ம் ஆண்டு 36 குடும்பங்களுக்கு அய்யப்பன் நகரில் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினர். இந்த வீட்டுமனை பட்டாவை பெருமாண்டியை சேர்ந்த ஒருவர், தன்னை எஸ்சிஎஸ்டி அமைப்பின் அகில இந்திய தலைவர் என்று கூறி எங்களிடமிருந்த பட்டாவை வாங்கி வைத்து கொண்டு அரசு சார்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறேன் என்றார்.

நாங்கள் பல ஆண்டுகளாக கேட்டு பார்த்தபோது பொறுமையாக இருங்கள், வீடு கட்டி தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வருகிறார். தற்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரிடமிருந்து எங்களது வீட்டுமனை பட்டாவை வாங்கி தர வேண்டும். மேலும் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். எனவே எங்களது வீட்டுமனை பட்டாவும், வீட்டுமனை பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றியும் அப்பகுதியை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: