சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சையை சேர்ந்தவர் தேர்வு

தஞ்சை, டிச. 12: தஞ்சையை சேர்ந்த துரைராஜு ரமேஷ்குமார் என்பவர் சர்வதேச கூடைப்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றுவதற்கான தேர்வில் தஞ்சையை சேர்ந்த துரைராஜு ரமேஷ்குமார் சர்வதேச கூடைப்பந்து நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவராக 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை பணியாற்றவுள்ளார்.

இவர் 2006ம் ஆண்டு வங்காளதேசம் தலைநகர் டாக்கில் நடந்த சர்வதேச கூடைப்பந்து போட்டி மற்றும் 2010ம் ஆண்டு சீனாவில் நடந்த 10வது ஆசிய விளையாட்டு மகளிர் கூடைப்பந்து போட்டியிலும் நடுவராக பணியாற்றினார். ஆசிய விளையாட்டில் இந்தியாவில் இருந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு நடுவராக பணியாற்றி இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் பல்வேறு சர்வதேச கூடைப்பந்து போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியுள்ளார். தற்போது மீண்டும் சர்வதேச கூடைப்பந்து போட்டிக்கு நடுவராக தேர்ச்சி பெற்று தமிழகத்துக்கும், தஞ்சை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவர் தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் கூடைப்பந்து அகாடமி ஏற்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

Related Stories: