×

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 48 மனு பெறப்பட்டன

கோவை, டிச. 12: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமியிடம் 48 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 48 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...